வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 அக்டோபர் 2025 (16:14 IST)

மாலையில் மீண்டும் குறைந்த தங்கம்.. இன்று ஒரே நாளில் 3000 ரூபாய் சரிவு..!

மாலையில் மீண்டும் குறைந்த தங்கம்.. இன்று ஒரே நாளில் 3000 ரூபாய் சரிவு..!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,000 குறைந்து, வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது. தொடர்ந்து விலை உயர்ந்து உச்சத்தை எட்டிய நிலையில், தீபாவளிக்கு பிறகு தங்கம் விலை படிப்படியாக இறங்க தொடங்கியுள்ளது.
 
வாரத்தின் இரண்டாவது நாளான இன்று காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் தங்கம் விலை சரிந்தது.
 
காலை நிலவரம்:
 
ஒரு சவரன் தங்கம் (8 கிராம்) விலை ரூ. 1,200 குறைந்து ரூ. 90,400 ஆக இருந்தது.
 
ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 150 குறைந்து ரூ. 11,300-க்கு விற்பனையானது.
 
மாலை நிலவரம்:
 
மாலையில்  ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 1,800 கூடுதலாக குறைந்து, மொத்தமாக ரூ. 88,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
தங்கம் விலை ஒரே நாளில் கணிசமாகக் குறைந்துள்ளதால், இது நகை வாங்குவோருக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளி விலை லிட்டருக்கு ரூ. 165 ஆக நீடிக்கிறது.
 
Edited by Mahendran