புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 17 பிப்ரவரி 2022 (16:41 IST)

ஏகத்துக்கும் உயர்ந்த தங்கத்தின் விலை: ரூ.37,920-க்கு விற்பனை!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.616 உயர்ந்து ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.616 உயர்ந்து ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.77 உயர்ந்து ரூ.4,740-க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.68.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.