முதல்முறையாக ரூ.68,000ஐ தாண்டியது தங்கம் விலை.. விரைவில் ரூ.1 லட்சம் எட்டுமா?
தங்கம் விலை முதல் முறையாக ஒரு சவரன் ₹68,000 தாண்டியுள்ள நிலையில், இன்னும் சில மாதங்களில் அது ₹1,00,000-ஐ தொட்டாலும் ஆச்சரியப்பட தேவையில்லை என நகை வியாபாரிகள் கூறி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு ₹60, ஒரு சவரனுக்கு ₹480 உயர்ந்துள்ளது. இதனால், தங்கம் விலை முதல் முறையாக ₹68,000-ஐ கடந்துள்ளது. இதே போக்கில் சென்றால், இன்னும் அதிக விலைக்கு தங்கம் போகும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ரூபாய் 8,510 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 480 உயர்ந்து ரூபாய் 68,080 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 9,283 எனவும் ஒரு சவரன் ரூபாய் 74,264 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 114.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 114,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva