1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. OnePlus 13 and OnePlus 13R launched in India! - What are the highlights?

இந்தியாவில் அறிமுகமானது OnePlus 13 மற்றும் OnePlus 13R! - சிறப்பம்சங்கள் என்ன?

OnePlus 13

புதிய ஆண்டில் ஒன்பிளஸ் நிறுவனம் மிகவும் எதிர்பார்ப்பில் இருந்த தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலான OnePlus 13 மற்றும் OnePlus 13R ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.


 


 

50 எம்பி ட்ரிப்பிள் கேமரா, 12 ஜிபி ரேம் என அதிகபட்ச அம்சங்களோடு வெளியாகியிருக்கும் இந்த மாடலின் சிறப்பம்சங்களை காணலாம்.

 

OnePlus 13R 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

 

  • 6.78 இன்ச் அமோலெட் ஸ்கிரீன்
  • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 3 சிப்செட்
  • 3.3 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்
  • 12 ஜிபி / 16 ஜிபி ரேம்
  • 256 ஜிபி / 512 ஜிபி இண்டெர்னல் மெமரி (மெமரி கார்டு ஸ்லாட் இல்லை)
  • 50 எம்.பி + 50 எம்.பி + 8 எம்.பி ட்ரிப்பிள் ப்ரைமரி கேமரா
  • 16 எம்.பி முன்பக்க செல்பி கேமரா
  • 5ஜி, ப்ளூடூத் 5.4, ஐஆர் ப்ளாஸ்டர்
  • 6000 mAh பேட்டரி, 80W பாஸ்ட் சார்ஜிங்

 

இந்த OnePlus 13R 5G ஸ்மார்ட்போன் ஆஸ்ட்ரல் ட்ரெய்ல், நெபுலா நுவோர் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ.42,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 16 ஜிபி + 512 ஜிபி மாடல் விலை ரூ.49,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

 

 

OnePlus 13 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

 

  • 6.82 இன்ச் அமோலெட் ஸ்கிரீன்
  • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8 Elite சிப்செட்
  • 4.32 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்
  • 12 ஜிபி / 16 ஜிபி / 24 ஜிபி ரேம்
  • 256 ஜிபி / 512 ஜிபி / 1 டிபி இண்டெர்னல் மெமரி (மெமரி கார்டு ஸ்லாட் இல்லை)
  • 50 எம்.பி + 50 எம்.பி + 50 எம்.பி ட்ரிப்பிள் ப்ரைமரி கேமரா
  • 32 எம்.பி முன்பக்க செல்பி கேமரா
  • 5ஜி, ப்ளூடூத் 5.4, ஐஆர் ப்ளாஸ்டர்
  • 6000 mAh பேட்டரி, 100W SUPERVOOC Charging
  • 50W AIRVOOC Charging, 10W reverse charging, 5W Reverse wireless charge

 

இந்த OnePlus 13 5G ஸ்மார்ட்போன் Black, Blue, White ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ.69,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 16 ஜிபி + 512 ஜிபி மாடல் விலை ரூ.76,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

 

இந்த OnePlus 13 மற்றும் OnePlus 13R விற்பனை ஜனவரி 10 முதல் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வலைதளங்களில் தொடங்குகிறது.

 

Edit by Prasanth.K

அடுத்த கட்டுரையில்
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்.. சோதனையை தொடங்கிய பறக்கும் படை..!