2020-ல் கார் விற்பனை எப்படி இருக்கும்?

Sugapriya Prakash| Last Modified சனி, 11 ஜனவரி 2020 (16:15 IST)
கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் கார் விற்பனை மந்தமாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கார் மற்றும் உதிரிபாக தயாரிப்பு இந்தியாவின் மொத்த உற்பத்தியில் பாதி அளவாக இருக்கிறது. இதனால் கடந்த ஆண்டு, பல கார் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பணியில் இருந்து வீட்டு அனுப்பியது. 
 
இந்நிலையில், நடப்பு ஆண்டிலும் கார் விற்பனை மிகவும் மந்தமாகவே இருக்கும் என்று  இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. 
 
புதிய மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகள், பொருளாதார மந்தம் உள்ளிட்டவற்றால் 2020 ஆம் ஆண்டில் கார்களின் விலை 8% - 10% அதிகரிக்கும் என தெரிகிறது. 
 
இதனால், எனவே இந்த ஆண்டும் அதன் விற்பனை அதிகரிக்க வாய்ப்பில்லை என்று  கூறப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு 22 லட்சமாக இருந்த கார் விற்பனை கடந்த ஆண்டு  18 லட்சமாக குறைந்தது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :