1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சமைக்கத் தயாரா?
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 19 ஏப்ரல் 2021 (14:32 IST)

கோடை பானம்: வீட்டிலேயே கிர்ணி ஜூஸ் போடுவது எப்படி?

கோடை காலத்தின் சீசன் பழமான கிர்ணி பழத்தில் ஜூஸ் போடுவது எப்படி என தெரிந்துக்கொள்ளுங்கள்... 

 
தேவையானவை: 
கிர்ணி பழம் - 1 
பால் - 500 மில்லி 
சர்க்கரை - 100 கிராம்  
 
செய்முறை:  
1. கிர்ணி பழத்தை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 
2. சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். 
3. காய்ச்சி, ஆற வைத்த பாலை சேர்த்துக் கலக்கவும். 
4. பரிமாறும் முன் ஐஸ் க்யூப் சேர்த்துப் பரிமாறலாம்.
  
குறிப்பு: கிர்ணிப் பழத் துண்டுகளுடன் வெல்லம் சேர்த்தும் சாப்பிடலாம். உடல் சூட்டைத் தணிக்கும்.