புதன், 4 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சமைக்கத் தயாரா?
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 10 ஜனவரி 2024 (17:42 IST)

பால் பவுடரில் குலோப் ஜாமூன் செய்வது எப்படி?

பால் பவுடர் வைத்து சுவையான குலாப் ஜாமூன் செய்வது எப்படி என இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுங்கள்…


தேவையான பொருட்கள்: பால் பவுடர் – 2 கப், மைதா மாவு  – 2 ஸ்பூன், நெய் – 1 ஸ்பூன், ரவை – 2 ஸ்பூன், சமையல் சோடா – 1 சிட்டிகை, பால் – 4 தேக்கரண்டி, சர்க்கரை – 1/2 கப், ஏலக்காய் பொடி, எண்ணை

செய்முறை:
முதலில் சர்க்கரை பாகு செய்வதற்கு ஒரு கடாயில் 1/2 கப் சர்க்கரை சேர்த்து அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

சர்க்கரை நன்கு கரைந்து ஓரளவு திக்கான பிறகு ஏலக்காய்த்தூள் சேர்த்து ஓரமாக எடுத்து வைக்கவும்.

குலோப் ஜாமுன் செய்வதற்கு ஒரு பவுலில் 2 கப் பால் அதனுடன் 2  ஸ்பூன் மைதா, 1 ஸ்பூன் நெய், 2 ஸ்பூன் ரவை,1 சிட்டிகை சமையல் சோடா சேர்த்து நன்கு கலக்கவும்.

கலந்த பின்னர் 4 தேக்கரண்டி பால் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மென்மையாக பிசைந்து கொள்ளவும். இதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் மிதமான தீயை விட சற்று குறைவாக வைத்து தயார் செய்து வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.

பொறித்த உருண்டைகளை தயார் செய்து வைத்துள்ள சர்க்கரைப் பாகில் போடவும். 4 முதல் 6 மணி நேரம் வரை ஊற வைத்தால் குலோப் ஜாமுன் தயார்.

குலோப் ஜாமூன் செய்ய இதோ சூப்பர் டிப்ஸ்:
1. குலாப் ஜாமுன் செய்வதற்கு தரமான பால் பவுடர் பயன்படுத்தவும்,  அப்பொழுதுதான் குலாப்ஜாமுன் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.
2. ஒரு பங்கு பால் பவுடருக்கு 3/4 பங்கு சர்க்கரை சரியாக இருக்கும்,  1/2 கப் முதல் 1 கப் வரை உங்கள் விருப்பத்திற்கேற்ப சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
3. சர்க்கரை பாகில் ஏலக்காய் பொடி சேர்ப்பதற்கு பதிலாக ரோஸ் எசன்ஸ் அல்லது குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளலாம்.
4. குலாப் ஜாமுன் செய்வதற்கு மாவு பிசையும் பொழுது ஓரளவு பிசுபிசுப்புடன் இருக்கும் படி பிசைந்துகொள்ளவும்.
5. சர்க்கரை பாகு செய்யும் பொழுது பாகு பதம் பார்க்கத் தேவையில்லை,  சர்க்கரை உருகி ஓரளவு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடலாம்.
6. குலோப் ஜாமூனை சர்க்கரை பாகில் சேர்த்த பிறகு 4 முதல் 6 மணி நேரம் வரை ஊற வைக்கலாம்.
7. குலோப்ஜாமுன்  எண்ணெயில் பொறிப்பதற்கு பதிலாக நெய்யில் பொரித்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
8. குறைவான தீயில் வைத்து பொரிக்கவும், சூடு அதிகமாக இருந்தால் குலோப்ஜாமுன் வெளியே கருப்பாகவும் உள்ளே வேகாமலும் இருக்கும்.
9. சமையல் சோடா நீங்கள் விருப்பபட்டால் சேர்க்கலாம் அல்லது சேர்க்காமலும் குலோப்ஜாமுன் செய்யலாம்.