தேங்காய்ப்பால் முறுக்கு செய்வது எப்படி?

சுவையான மாலை நேர ஸ்னாக்ஸ் தேங்காய்ப்பால் முறுக்கு எப்படி செய்வது என இங்கே பார்க்கலாம்.


 
தேவையானவை:-
 
வறுத்த உளுத்தம் பருப்பு மாவு - 1 கிண்ணம்
அரிசி மாவு - 4 கிண்ணம்
தேங்காய் - 1
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
மிளகு - சிறிதளவு
சீரகம் - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை:-
 
ஒரு பவுலில் மிளகு, சீரகம் ஆகியவற்றை கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். இதனுடன் சலித்த அரிசி மாவு, வறுத்து அரைத்த உளுத்தம் பருப்பு மாவு, உப்பு ஆகியவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் வெண்ணெய்யைச் சேர்த்து மாவை நன்கு கிளறவும். பின்னர், தேங்காயைத் துருவி சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிகட்டி கெட்டியான தேங்காய்ப்பால் எடுக்கவும். பிசைந்து வைத்த மாவை 4 அல்லது 5 பகுதியாக பிரித்துக் கொள்ளவும். 
 
பின்னர் ஒரு வட சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை எடுத்து அச்சில் போட்டு முறுக்கு போல் பிழிந்து எண்ணெயில் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்
சுவையான தேங்காய்பால் முறுக்கு ரெடி


இதில் மேலும் படிக்கவும் :