மூங்கில் முட்டை பொரியல் சுவைக்க வேண்டுமா? அப்போ இந்த வீடியோவை பாருங்க!

Abimukatheesh| Last Updated: புதன், 7 ஜூன் 2017 (15:59 IST)
மூங்கிலில் புட்டு, பிரியாணி, மீன், மட்டன் என அனைத்து சமைக்க தொடங்கிவிட்டனர். இரண்டு சிறுவர்கள் மூங்கில் முட்டை பொரியல் சமைத்து அசத்துகின்றனர்.


 
மூங்கிலில் பிரியாணி முதல் மீன், மட்டன் என அனைத்தும் சமைக்க தொடங்கிவிட்டனர். மூங்கிலி எது சமைத்து சாப்பிடாலும் அது ஒரு தனி சுவையை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு சிறுவர்கள் மூங்கிலில் முட்டை பொரியல் சமைக்கும் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 
 
அதில், சிறுவர்கள் முதலில் வெங்காயத்தை நறுக்கி கொள்கின்றனர். அடுத்து முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றுகின்றனர். பின் வெங்காயம் மற்றும் உடைத்த முட்டையை கலந்து மூங்கிலுக்குள் ஊற்றி, மூங்கிலின் மேல் பகுதி அடைத்து அதை தீயில் வைத்து விடுகின்றனர்.
 
சிறிது நேரம் கழித்து அந்த மூங்கிலை எடுத்து அதன் மீது தண்ணீர் ஊற்றி பின் உள்ளே வெந்த மூட்டை எடுக்கின்றனர். அவ்வளவுதான் மூங்கில் முட்டை பொரியல் தயார்.

 

நன்றி: SRDaily


இதில் மேலும் படிக்கவும் :