புதன், 27 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. சிவராத்திரி ஸ்பெஷல்
Written By Sasikala

சிவராத்திரியின்போது விரதம் இருப்பது எத்தகைய பலன்களை பெற்றுத்தரும்...?

சிவராத்திரிக்கு முதல் நாள், ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, ஆலயத்திற்குச் சென்று ஈசனை வழிபட வேண்டும். தொடர்ந்து வீட்டில் சிவபூஜை செய்ய வேண்டும். 
இரவு வீட்டிலேயே நான்கு ஜாமங்களிலும் நான்கு கால பூஜையை முறைப்படி செய்யலாம். அப்படி செய்ய முடியாதவர்கள், சிவாலயங்களில் நடைபெறும் சிவ  பூஜையில் கலந்து கொள்ளலாம். வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வது கூடுதல் பலன் தரும்.
 
வீட்டில் பூஜை செய்பவர்கள், பஞ்சாட்சர மந்திரமான ‘நமசிவாய’, ‘சிவாய நம’ வார்த்தைகளை உச்சரித்தபடி இருக்க வேண்டும். மகா சிவராத்திரியின் முதல்  ஜாமத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் ஜாமத்தில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியையும், மூன்றாம் ஜாமத்தில் லிங்கோத்பவரையும், நான்காம்  ஜாமத்தில் ரிஷபாரூட மூர்த்தி (சந்திரசேகரர்)யையும் வழிபட வேண்டும். 
நான்கு கால பூஜைக்கு முன்பாக நடராஜரையும், பிரதோஷ நாயகரான நந்தியம்பெருமானையும் வழிபட வேண்டும். கண் விழித்திருக்கும் பக்தர்கள் சிவ புராணம்,  திருவிளையாடல் கதைகள், அறுபத்து மூவர் வரலாறு முதலான சிவ மகத்துவங்களை விவரிக்கும் ஞான நூல்களைப் படிப்பது, மிகுந்த புண்ணியம் தரும்.
 
மறுநாள் அதிகாலையில் நீராடி, இறைவனுக்கு நைவேத்தியம் படைத்து பூஜிக்க வேண்டும். ஏழை எளியவர்களுக்கு தானம் செய்து சிவராத்திரி விரதத்தை  முடிக்கலாம்.