ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளில் பாஜக முன்னிலை;
மத்தியில் ஆட்சி அமைக்க 273 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் சற்றுமுன் பாஜக 290 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவதால் அடுத்த ஆட்சியை பாஜக அமைக்க வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது.
காங்கிரஸ் கூட்டணி 104 தொகுதிகளிலும் மற்றவை 91 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இதே ரீதியில் முன்னிலை சென்றால் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துவிடும் என்றே கருதப்படுகிறது
மேலும் தமிழகத்தை பொருத்தவரை திமுக கூட்டணி 31 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 4 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
தேனியில் சற்றுமுன் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் வந்துள்ளதால் இந்த இரு தொகுதிகளிலும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.