நீங்கள் சாதித்து விட்டீர்கள் - மோடிக்கு வாழ்த்து சொன்ன ரஜினி !

Last Modified வியாழன், 23 மே 2019 (14:24 IST)
மக்களவைத் தேர்தலில் பெரும்பாண்மை பெற்று முன்னிலை வகிக்கும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்தர மோடிக்கு ரஜினி  வாழ்த்துக் கூறியிருக்கிறார்.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பாஜக  347 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. உறுதியான முடிவுகள் தெரியவர மாலை ஆகலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் பாஜகவின் வெற்றி கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.

இம்முறையும் பாஜகவின் பிரதமராக மோடியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மோடிக்கும் பாஜகவுக்கும் மோடிக்கும் வாழ்த்துமழைப் பொழிந்து வருகிறார்கள். பாஜகவின் வெற்றியை அடுத்து நடிகரும் மோடியின் நண்பருமான ரஜினி டிவிட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் ’மரியாதைக்குரிய மோடி அவர்களே. இதயப்பூர்வமான வாழ்த்துகள்.. நீங்கள் சாதித்து விட்டீர்கள்.. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :