கார்த்திக் சிதம்பரத்தை வேட்பாளராக அறிக்க வேண்டும் - சிவகங்கை காங்கிரஸார்

karthy
Last Modified சனி, 23 மார்ச் 2019 (19:37 IST)
வரும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி அனைத்து  கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் நேற்று தமிழகத்தில் போட்டியிடும் 8 வேட்பாளர் பேர்களை அறிவித்தார்கள். ஆனால் சிவகங்கை தொகுதியில் மட்டும் இன்னும் அறிவிக்கவில்லை.  
அத்தொகுதிக்கு கார்த்திக் சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் இடையே போட்டி நிலவுவதாக பேச்சு எழுகிறது. 
 
இது ஒரு புறம் இருக்க கார்த்திக் சிதம்பரம் மீது நீதிமன்ற வழக்குகள் இழுபறியில் இருப்பதால் காங்கிரஸ் மேலிடம் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சிதம்பரத்தின் மகனான கார்த்திக் சிதம்பரத்தை வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தி சிவகங்கை காங்கிரஸார் திர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இல்லையென்றால் தேர்தலை புறக்கணிக்கவும் கார்த்தி ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.


இதில் மேலும் படிக்கவும் :