1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
  4. People oppose for thambidurai campaigning

தம்பிதுரையை துரத்திய மக்கள்: பிரச்சாரத்தில் பரபரப்பு!!!

தம்பிதுரை
வாக்கு சேகரிக்க சென்ற தம்பிதுரையை பொதுமக்கள் புறக்கணித்து துரத்தி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டம்னற இடைத்தேர்தல் நெருங்க இன்னும் சில நாட்களே உள்ளது. பல்வேறு கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்கட்சிகளின் ஊழல்களை ஆளுங்கட்சியினரும், ஆளுங்கட்சியினரின் ஊழல்களை எதிர்கட்சிகளும் சொல்லி மாறி மாறி குறை கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் அதிமுக எம்.பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தான் போட்டியிடும் கரூர் தொகுதி குஜிலியம்பாறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதி மக்கள் தம்பிதுரைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  
 
எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல் ஓட்டு கேட்டு வருவீர்களா என கேள்வி எழுப்பினர். தம்பிதுரை மக்களை சமாதானம் செய்ய முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை. தொடர்ச்சியாக மக்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் அவர் அங்கிருந்து சென்றார்.
அடுத்த கட்டுரையில்
8 வழிச்சாலை: விடாமல் துரத்தும் ஆளும் கட்சி; விரக்தியில் மக்கள்