வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 21 மார்ச் 2019 (18:11 IST)

அக்னிதேவி படத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு

நடிகர் பாபிசிம்ஹாவுக்கு பதிலாக கிராபிக்ஸ் செய்து படம் எடுத்ததாக இயக்குநர் ஜான் பால்ராஜின் ’அக்னி தேவ்’ படத்திற்கு கோவை மாவட்ட முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தனக்குப் பதிலாக டூப் போட்டும் கிராபிக்ஸ் செய்தும் அக்னி தேவ் படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் ஜான் பால்ராஜ் படம் எடுத்துள்ளார். எனவே அக்னி தேவ் படத்தை வெளியிடக் கூடாது என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
 
இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இப்படத்தினை வெளியிடுவதில் உள்ள உண்மைத் தன்மைகளை ஆராய வேண்டி நீதிமன்ற ஆணையராக வழக்கறிஞர் கார்த்திகாவை நியமித்தது.
 
மேலும் நீதிமன்ற ஆணையர் அறிக்கையை சமர்பித்து மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அகினி தேவி படத்தை வெளியிடுவது தொடர்பாக முன்பிருந்த நிலையே தொடரும் என்று கோவை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதிகள் தெரிவித்தனர்.