தொடர்புடைய செய்திகள்
- ’ நாடக தினம்’ மோடியை கலாய்த்து தள்ளிய ராகுல் காந்தி
- நிலாவுல வட சுட்ட ஆயாவுக்கு ஒன்னும் ப்ராபிளம் இல்லயே? வைரலாகும் மோடி மீம்ஸ்!
- மோடி ஜி எங்க வீட்டு மாப்பிள்ளை !!! பரவசத்தில் பொங்கிய செல்லூரார்!!!
- மோடி வைத்த சஸ்பென்ஸ் ரிவீல்ட்! ஒட்டு மொத்த நாட்டுக்கே பெருமை!!!
- மோடி படத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம் !
மோடி ஒரு கதாநாயகன்...மோடி ஒரு ஸ்டண்ட் மாஸ்டர்... மோடி ஒரு மல்யுத்த வீரர்.... அமைச்சர் பொளேர்!!!
இந்தியாவிற்கு பிரச்சனை என்றால் மோடி ஸ்டண்ட் மாஸ்டராக மாறி நாட்டை காப்பாற்றுவார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
அதிமுக அமைச்சர்கள் சிலர் எப்பொழுதும் மோடியையும் பிஜேபியையும் ஓவராக புகழ்வர். அந்த லிஸ்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு ஆகியோர் பரவசப்பட்டு புல்லறிக்கும் படி புகழ்வர். ஆனால் மோடியையும், பிஜேபியையும் தேர்தலுக்கு முன்னர் கழுவி ஊற்றிய எம்.பி தம்பிதுரை, தற்போது பிஜேபியின் கொள்கை பரப்பு செயலாளர் போல வேலை செய்து வருகிறார்.
சமீபத்தில் பேசிய அமைச்சர் பாலாஜி ஜெயலலிதா என்கிற அம்மா இல்லாத எங்களுக்கு பிரதமர் மோடிதான் தற்போது ‘டாடி’யாக இருந்து வழிநடத்துகிறார் என கூறி பரபரப்பைக் கிளப்பினார்.
இதையடுத்து தற்போது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இந்தியாவிற்கு பிரச்சனை என்றால் மோடி ஸ்டண்ட் மாஸ்டராக மாறி நாட்டை காப்பாற்றுவார், அவர் ஒரு மல்யுத்த வீரர், மோடி ஒரு கதாநாயகன் என ஏகபோகமாக பாராட்டினார்.
அடுத்த கட்டுரையில்
