செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Modified: புதன், 3 ஏப்ரல் 2019 (16:15 IST)

கமல்ஹாசன் சர்வாதிகாரியாக செயல்படுகிறாரா? கட்சி நிர்வாகிகள் அதிருப்தி ஏன்?

சமீபத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகியான குமரவேல் வெளியேறினார். பின்னர் இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பின் போது, வேட்பாளர் நேர்முகத் தேர்வின் போது கோவைசரளா இருந்ததாகக் கூறியும் கட்சியை சிலர் தவறாக வழிநடத்துவதாகம் கூறியும், அதிருப்தி அடைந்து  குற்றம் சாட்டினார். 
இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதன் பிறகு நான் ஒன்றும் முட்டாளல்ல என்று கோவை சரளா விளக்கம் கொடுத்தார்.
 
இதனையடுத்து தன் கட்சி வேட்பாளர்களுக்கு மருத்துவர்களைக் கொண்டு மனநலப் பயிற்சி மற்றும் தியான வகுப்புகளை நடத்தினார். இதற்கும் பெரும்பாலான நிர்வாகிகள் சலித்துக்கொண்டனர்.
 
இந்நிலையில் தற்போது திருநெல்வேலி மேற்கு மாவட்ட பொறுப்பாளர், கருணாகரராஜா நெல்லை மத்திய பொறுப்பாளர் செந்தில் ஆகியோர் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
லோக்சபா தேர்தல் நெருங்கி விட்டதை அடுத்து, கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வருவதை கட்சியினர் அவ்வளவாக ரசிக்கவில்லை என்று தெரிகிறது.
 
மேலும் கட்சியினருடைய கோரிக்கைகளை, பாதிக்கபட்டவர்களுடைய பிரச்சனையை, காதுகொடுத்து கமல் கேட்க வேண்டும் எனவும் கமல்ஹாசனுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
தசாவதாரம் படத்தைப் பற்றி பிரபல எழுத்தாளர் எதிர்மறையாக விமர்சனம் எழுதியற்காக அப்பத்திரிக்கையின் ஆசிரியை கமல் கண்டித்ததுடன் ஒரு சர்வாதிகாரி மாதிரி நடந்துகொண்டார்  எனஅவ்வெழுத்தாளர் சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.