வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 14 ஏப்ரல் 2019 (09:24 IST)

தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து! மோடி டுவீட்

தமிழ் புத்தாண்டு தினமான இன்று பிரதமர் மோடி தமிழ் மக்களுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்தபோது தமிழ்ப்புத்தாண்டு இந்த இருவரின் கையில் சிக்கி படாதபாடு பட்டது. சித்திரை 1ஆம்தேதி தமிழ்ப்புத்தாண்டு என்று ஜெயலலிதாவும் தை 1ஆம் தேதிதான் தமிழ்ப்புத்தாண்டு என்று கருணாநிதியும் அறிவித்து வந்தனர்.
 
இந்நிலையில் இன்று தமிழக மக்கள் எல்லோரும் தமிழ் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். வீட்டில் சுவாமிக்கு பூஜையிட்டு படையல் போட்டு குடும்பம் தழைக்க வேண்டுவர்.
தற்போது பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு டிவிட்டரில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது டிவிட்டரில் தமிழ்நாட்டின் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.