வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டிய பாஜக தலைவர் ?

amith sha
Last Modified சனி, 6 ஏப்ரல் 2019 (18:45 IST)
மக்களவைத் தேர்தல் நெருங்கி விட்டது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கருத்துக் கணிப்புகளும் அவ்வப்போது வெளிவந்து கட்சித் தலைவர்களுகு பீதியைக் கிளப்பிவருகிறது. ஆனாலும் பகலில் வெ
யிலோடு மல்லுக்கட்டி பிரசாரம் செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் குஜராத் மாநிலத்திலுள்ள காந்தி நகரில் தலைவர் அமித் ஷா போட்டியிட இருக்கிறார். சில நாட்களுக்கு முன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த அமித் ஷா தனது சொத்து மதிப்பை 66 லட்ச ரூபாய் என்பதற்குப் பதிலாக, 25 லட்சம் ரூபாய் என்று தான் அவர் பதிவிட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். 
 
மேலும் அமித் ஷா தனக்கு 25 கோடி ரூபாய் வங்கிக்கடன் உள்ளதாகவும் குறிப்பிடவில்லை. எனவே அமித் ஷா மீது உரிய நடவடிக்கை எடுத்து அவரை வேட்பாளர் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று காங்கிரஸார் வலியுறுத்தி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :