செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: புதன், 3 ஏப்ரல் 2019 (13:29 IST)

தமிழிசைக்கு எனது வாழ்த்துகள் – கனிமொழி டிவிட்டரில் பதில் !

தமிழிசைக்கு எனது வாழ்த்துகள் என திமுக வேட்பாளர் கனிமொழி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

வர இருக்கும் நாடளுமன்றத் தேர்தலை ஒட்டி தமிழத்தில் திமுக மற்றும் அதிமுக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. தேர்தல் நேரத்தில் சில தொகுதிகள் ஸ்டார் அந்தஸ்து பெற்ற தொகுதிகளாக மாறுவது வழக்கம். ஒருக் கட்சியின் பிரபலமானத் தலைவர் போட்டியிடும் தொகுதி அல்லது இரண்டு எதிர்க்கட்சிகளில் மிகப் பிரபலமான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி ஆகியவைத் தேர்தல் களத்தில் மிகவும் கவனம் பெறும். அதுபோல இந்தாண்டு தூத்துக்குடித் தொகுதி மிகுந்த கவனம் பெறும் தொகுதியாக மாறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அந்த வகையில் தூத்துக்குடி இந்த தேர்தலில் கனிமொழி மற்றும் தமிழிசையின் நேருக்கு நேர் மோதலால் ஸ்டார் தொகுதியாகியுள்ளது. இருவரும் தூத்துக்குடியில் முகாமிட்டு தீவிரப்பிரச்சாரம் செய்து வருகின்றனர். தூத்துக்குடியில் நடக்கும்  பிரச்சாரங்களில் ஸ்டெர்லைட் விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை முக்கியத்துவம் பெற்று வருகின்றனர்.

களத்தில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் கனிமொழி, தொகுதி மக்கள் தன்னிடம் கேட்க விரும்பும் கேள்விகளை #AskKanimozhi என்ற ஹேஷ்டேக்கில் கேட்கலாம். இதில் தமிழிசை பற்றி தங்களது கருத்து என்ன என ஒருவர் கேட்ட கேள்விக்கு கனிமொழி பதிலளித்துள்ளார். அதில் ‘ தமிழிசை அவர்கள் தமிழக பாஜகவின் தலைவராக பதவியேற்ற பின் கலைஞரை சந்திக்க விரும்பினார். அப்போது குமரி ஆனந்தனின் மகள் என் மகள் போன்றவர் எனக் கூறி ஆசி வழங்கினார். அதனால் கலைஞரின் மகளான தமிழிசைக்கு எனது வாழ்த்துகள். அவர் தூத்துக்குடி தொகுதிக்கு புதியவர். அவருக்கு இன்னமும் இந்த ஊரைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம்’ என தெரிவித்துள்ளார்.