வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Modified: சனி, 30 மார்ச் 2019 (11:22 IST)

மாம்பழமா? ஆப்பிளா? கன்ஃபியூசான அமைச்சர்... ஷாக்காக ராமதாஸ்

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாம்பழ சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள் என்று கூறுவதற்கு பதிலாக ஆப்பிள் சின்னத்தில் ஓட்டு போடுங்கள் என கூறியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
 
பொதுவாகவே அதிமுகவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் தனி ரகம். மக்களை சநித்து பேசினாலோ, அல்லது செய்தியாளர்களை சந்தித்து பேசினாலோ உச்சகட்ட பரபரப்பை கிளப்புவர்.
 
பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி பாமக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
 
அப்போது பேசிய அவர் ராமதாசை ஹாஹா ஹோஹோன்னு புகழ்ந்து தள்ளினார். பின்னர் தொடர்ச்சியாக பேசிய அவர் உங்கள் பொன்னான வாக்குகளை ஆப்பிள் சின்னத்திற்கு போடுங்கள் என வழக்கம்போல் வாய் தவறி உளறினார். இதனால் அங்கிருந்தவர்கள் ஷாக்காகி அது ஆப்பிள் சின்னம் அல்ல மாம்பழம் என கூறினர். பின்னர் அசடு வழிந்தவாறே ஆமா ஆமா மாம்பழ சின்னம் என கூறி சமாளித்தார்.
 
ஒரு பக்கம் என்னன்னா அதிமுக திமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள் என பழக்க தோஷத்தில் கூறி பரபரப்பைக் கிளப்பினார் ராமதாஸ். மறுபக்கம் என்னன்னா அதிமுக அமைச்சருக்கு கூட்டணி கட்சிகளின் சின்னம் கூட தெரியாமல் இப்படி காமெடி செய்து வருகின்றனர் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.