1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (08:41 IST)

வாக்காளர்களுக்கு அல்வா ஊட்டி வாக்கு சேகரித்த கலா மாஸ்டர்.. செளமியாவுக்கு தீவிர பிரச்சாரம்..!

சௌமியா அன்புமணி போட்டியிடும் தர்மபுரி தொகுதியில் சினிமா டான்ஸ் மாஸ்டர் கலா வாக்காளர்களுக்கு அல்வா ஊட்டி வாக்கு சேகரித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. 
 
தர்மபுரி பகுதியில் போட்டியிடும் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார் என்றும், அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக கடந்த சில நாட்களாக பிரச்சாரம் செய்து வரும் கலா மாஸ்டர் மக்களுக்கு அல்வா ஊட்டி வாக்கு சேகரித்தார். அதேபோல் நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல் முருகனை ஆதரித்தும் கலா மாஸ்டர் பிரச்சாரம் செய்தார் 
 
கலா மாஸ்டர் வாக்கு சேகரிக்க சென்ற போது வயலில் பெண்கள் களை எடுத்துக் கொண்டிருந்தபோது கலா மாஸ்டர் இறங்கி களை எடுத்த காட்சியின் வீடியோவும் வைரல் ஆகி வருகிறது. 
 
மொத்தத்தில் வாக்காளர்களுடன் ஒன்றி கலா மாஸ்டர் தேர்தல் பிரச்சாரம் செய்து வருவதை பாஜகவினர் ரசித்து வருகின்றனர் என்பதும் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல கூட்டம் கூடுகிறது என்றும் கூறப்படுகிறது. '

 
Edited by Siva