புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By J.Durai
Last Updated :பெரம்பலூர் , வெள்ளி, 22 மார்ச் 2024 (09:48 IST)

உரிய அனுமதியின்றி தேர்தல் விதிமுறைகளை மீறிதாக,எம்எல்ஏ உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு!

உரிய அனுமதியின்றி தேர்தல் விதிமுறைகளை மீறிதாக,எம்எல்ஏ உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு!
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் முன்   அனுமதி எதுவும் பெறாமல் திமுக கட்சிக்கு ஆதரவாக பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 19ம்தேதி எம்எல்ஏ பிரபாகரன், திமுக கட்சி பேச்சாளர் கோவிந்தன் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம்  மேற்கொண்டனர்.
 
இது குறித்து விஏஓ சுரேஷ் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட எம்எல்ஏ பிரபாகரன், கட்சி பேச்சாளர் கோவிந்தன் ஆகியோர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.