1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By J.Durai
Last Modified: பெரம்பலூர் , வியாழன், 21 மார்ச் 2024 (09:15 IST)

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் "என் வாக்கு என் உரிமை” விழிப்புணர்வு பாடல் வெளியிட்ட மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் -க.கற்பகம்

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. 
 
18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்களின் வாக்கினை செலுத்தி ஜனநாயக் கடமையாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
 
அதன் ஒரு பகுதியாக பெரம்பலூரைச் சேர்ந்த மேத்யூ என்பவர் எழுதி இசையமைத்து, பெரம்பலூர் அரசு இசைப்பள்ளியில் இசை ஆசிரியராகப் பணியாற்றும் நடராஜன் என்பவர் பாடிய என் வாக்கு என் உரிமை என்ற விழிப்புணர்வு பாடலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான க.கற்பகம்   வெளியிட்டார்.
 
அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும்,100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் அமைந்துள்ள இந்தப் பாடலை பொதுமக்கள் அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்கும் வகையில் வாட்ஸ்அப், மற்றும் சமூக ஊடகங்களில்  வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடல் எழுதி இசையமைத்துப் பாடிய இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
 
இந்நிகழ்வின் போது,  தேர்தல் வட்டாட்சியர்கள் சிவா, அருளானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.