1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By J.Durai
Last Modified: மதுரை , வெள்ளி, 22 மார்ச் 2024 (09:37 IST)

திமுக தேர்தல் அறிக்கை தமாஷாக உள்ளது - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ !

மதுரை நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர். சரவனணுடன், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது பேசியதாவது:
 
"பாஜகவை விட ஆபத்தான கட்சி அதிமுக என மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியுள்ளார்.
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை ஜெயிக்க வைத்தது அதிமுக.
பாலகிருஷ்ணன் நல்ல மன நிலையில் சொன்னாரா,அல்லது அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு விட்டதா என தெரியவில்லை. தோல்வி பயத்தில் இப்படி பேசியுள்ளார்.
 
பாஜக ஒரு மதவாத கட்சி.அதைவிட  நாங்கள் ஆபத்தானவர்கள் என சொல்வது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
 
பாமக உள்ளிட்ட கட்சியினர் பாஜக கூட்டணிக்கு போவதை பற்றி எங்களுக்கு கவலையில்லை.
 
இறுதியில் மக்கள் தான் எஜமானர்கள்.
திமுக அரசும், பாஜக அரசும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
 
திமுக தேர்தல் அறிக்கை தமாஷாக உள்ளது. 
 
மக்களை இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்களோ?
திமுக எம்.பி.க்கள் ஐந்தாண்டுகளாக எதுவும் செய்யவில்லை.
 
இதே போலத்தான் கேஸ் விலையை குறைப்பேன் என மோடியும் சொன்னார், வீட்டுக்கு 15 லட்சம் தருவேன் என்றார். எதையும் செய்யவில்லை" என்றார்.