திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 12 பிப்ரவரி 2024 (18:15 IST)

மீண்டும் ராமநாதபுரம் தொகுதியே வேண்டும்..! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தல்..!!

kadhar moideen
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியையே தங்களுக்கு மீண்டும் ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வலியுறுத்தி உள்ளது.
 
மக்களவை தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தேர்தலுக்கான பணிகளில் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. 
 
கூட்டணி கட்சிகளுடன் திமுக தேர்தல் குழு கடந்த ஒரு வாரங்களாகவே ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட ஆலோசனை நிறைவு பெற்றுள்ளது. 
 
இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில் திமுக ஈடுபட்டது.
 
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், திமுகவிடம் எங்களுடைய கோரிக்கைகளையும் விண்ணப்பங்களையும் கருத்துகளையும் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறோம் நன்றி தெரிவித்தார்.
 
ஐந்தாண்டு காலம் ராமநாதபுரத்தில் நவாஸ்கனி சிறப்பான முறையில் பணியாற்றி உள்ளதாகவும் ராமநாதபுரம் தொகுதியையே மீண்டும் திமுகவிடம் கேட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

 
ஒரு மாநிலங்களவை தொகுதியையும் ஒதுக்க வேண்டும் என திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றும் எங்களுடைய கோரிக்கைகளை பரிசீலிப்பதாக திமுக கூறியுள்ளதாகவும் காதர் மொய்தின் தெரிவித்தார்.