திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 12 பிப்ரவரி 2024 (14:49 IST)

திமுகவுக்கு ஆதரவாக வந்த கருத்துக்கணிப்பு முழு பொய்: டிடிவி தினகரன்

திமுக கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றியை பேரும் என்று வந்த கருத்துக்கணிப்பு முழு பொய் என்றும் இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கவில்லை, கூட்டணி உறுதி செய்யப்படவில்லை, தேர்தல் அறிக்கை கூட வெளியாகவில்லை, அதற்குள் எப்படி கருத்துக்கணிப்பு எடுக்க முடியும் என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
 
 தஞ்சாவூரில் நடந்த  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய டிடிவி தினகரன் ‘திமுக மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.  ஆனால் திமுக 39 தொகுதிகள் ஜெயிக்கும் என்று வெளியான கருத்துக்கணிப்பு முழுக்க முழுக்க போய். மொத்தமே 15,000 பேரிடம் தான் அவர்கள் சர்வே எடுத்துள்ளனர். 
 
தேர்தல் வாக்குறுதி என்ற பெயரில் எப்படி மக்களை ஏமாற்றினார்களோ அதே போல் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் ஏமாற்றுவதற்கு திமுகவின் முயற்சியில் நடந்து வருகிறது. 
 
திமுக கூட்டணியும் அவர்கள் அமைத்த இந்தியா கூட்டணியும் சிதறிவிட்ட நிலையில்  திமுக மீது மக்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் எப்படி 39 தொகுதிகள் ஜெயிக்க முடியும்? திமுகவுக்கு மாற்றாக தமிழகத்தில் இருக்கும் ஒரே கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் என்று அவர் கூறினார்
 
Edited by Siva