திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 25 மார்ச் 2024 (14:24 IST)

விஜய பிரபாகரனை வாழ்த்திய ராதிகா.! தட்டிக் கொடுத்த சரத்குமார்..!

Vijaya Praba Radhika
விருதுநகரில் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற நடிகை ராதிகா, அங்கிருந்த தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
 
மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது. தேமுதிகவுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், விருதுநகர் தொகுதியில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார்.
 
விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகரன், மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசீலனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது  முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் தேமுதிக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 
இதனிடையே விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை ராதிகா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது அங்கிருந்த விஜய பிரபாகரனுக்கு ராதிகா வாழ்த்து தெரிவித்தார்.  சரத்குமார் தட்டி கொடுத்தார்.  இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ராதிகா, விஜய பிரபாகரன் எனக்கும் மகன் மாதிரி தான் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.