வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : சனி, 23 மார்ச் 2024 (15:23 IST)

தந்தையின் கனவுகளை நிறைவேற்றுவேன்..! விஜய பிரபாகரன் சூளுரை..!!

Vijaya Prabakaran
மக்களை தங்கத்தட்டில் வைத்து தாலாட்ட வேண்டும் என்ற எனது தந்தையின் கனவை நிறைவேற்றுவேன் என்று மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
 
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்தார். விருதுநகர் தொகுதியில் தனது மகன்  விஜய பிரபாகரனை பிரேமலதா களம் இறக்கி உள்ளார்.
 
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின், தனது தந்தையின் புகைப்படம் முன்பு நின்று ஆசி பெற்றார் விஜய பிரபாகரன். இந்நிலையில் தனது தந்தையின் கனவுகளை நிறைவேற்றுவேன் என்று விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.
 
மக்களை தங்கத்தட்டில் வைத்து தாலாட்ட வேண்டும் என்ற எனது தந்தையின் கனவை நிறைவேற்றுவேன் என்று அவர் சூளுரைத்துள்ளார். விருதுநகர் பகுதி மக்கள் தேர்தலில் என்னை நிச்சயம் வெற்றி பெற செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பார்கள் என நம்புகிறேன் என்று விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். 


விருதுநகர் தொகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவேன் என்றும் உறுதியளித்துள்ளார்.