திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 14 பிப்ரவரி 2024 (08:01 IST)

ஸ்ரீபெரும்புதூரில் பிரியங்கா காந்தி போட்டியா? டிஆர் பாலு அதிர்ச்சி.. காங்கிரஸ் உற்சாகம்..!

Priyanka Gandhi
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றவர் டி ஆர் பாலு. இந்த முறை அவருக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை வழங்கக் கூடாது என திமுகவினர் மேல் இடத்தில் கூறியுள்ள நிலையில் தற்போது திடீர் திருப்பமாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது

சோனியா காந்தியின் குடும்பத்தினர் தென்னிந்தியாவில் போட்டியிடுவதே பாதுகாப்பானது என கூறப்பட்டுள்ள நிலையில் சோனியா காந்தி புதுச்சேரியில் போட்டியிடுவார் என்றும் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பிரியங்கா காந்தி வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் அவர் தனது தந்தை காலமான ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் திமுக தாராளமாக பிரியங்கா காந்திக்கு அந்த தொகுதியை வழங்கி விடும் என்றும் இதனால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் இருக்கும் நிலையில் டி ஆர் பாலு அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva