1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 12 மார்ச் 2024 (18:42 IST)

2 ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்.. கமல்நாத்தின் மகனுக்கு வாய்ப்பு..!!

congress leaders
மக்களவைத் தேர்தலையொட்டி 43 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
 
நாடாளுமன்ற மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கூட்டணி பேச்சு வார்த்தை,  தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 
 
கடந்த 8 ஆம் தேதி 39 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் 43 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் இன்று வெளியிட்டுள்ளார். அசாம், மத்திய பிரதேசம் ராஜஸ்தான் மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

 
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் மகனுக்கு தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டின் மகனும் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் மோகன் குப்தா அகமதாபாத் தொகுதியில் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.