இன்னும் ஷூட்டிஙெகே தொடங்கல அதுக்குள்ள ஓடிடி பிஸ்னஸை முடித்த ‘குட் பேட் அக்லி’!
அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நேற்று முன்தினம் இந்த படத்தின் டைட்டில் ‘குட் பேட் அக்லி’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலிஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் பெரும் தொகையைக் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.