வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வியாழன், 4 ஏப்ரல் 2024 (23:24 IST)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு

18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். எனவே நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை முதல் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டது.
 
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட  நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிர  பிரசாரம் மற்றும் வாக்குகள் சேகரிப்பில்  ஈடுபட்டுள்ளன.
 
தமிழ் நாட்டில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவுடன் தமிழ் நாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.
 
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
இதனை டெல்லியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மூத்த தலைவர்களான  பிரகாஷ் காரத், பிருந்தா காரந்த் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.
 
இந்த தேர்தல் அறிக்கையில்,  பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். மத்தியில் மாற்று மதச்சார்பற்ற அரசாங்கம் அமைப்படுவதை  உறுதிசெய்ய வேண்டும் போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 
 
 தமிழ் நாட்டில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை தேர்தலில், மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.