வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 முக்கிய வேட்பாளர்கள்
Written By
Last Updated : வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (15:46 IST)

உழைப்பால் உயராதவர் ஸ்டாலின் - முதல்வர் பழனிசாமி

அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஓட்டுசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள இருபெரும் திராவிட கட்சிகளின் பிரசாரம் ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சிக்கும் வகையில் உள்ளது. இதனால் மக்கள் தலைவர்களின் பேச்சைக்கேட்டு முகம் சுளிக்கின்றனர்.
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக  சார்பில் போட்டியிடும்  வேட்பாளர் காளியப்பனை ஆதரித்தும் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர், தீவட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளரான சரவணனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது :
 
திமுக தலைவர் ஸ்டாலின் உழைப்பால் உயர்ந்தவரில்லை. ஒருவேளை ஸ்டாலின் உழைப்பால் உயர்ந்திருந்தால் கஷ்டம் தெரிந்திருக்கும்.
திமுக பொய்யான வாக்குறிதிகளை அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களைக் குழப்பி வருவதாகிறது.
 
மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்ததும் காவிரி, கோதாவரி இணைப்பிற்கு முதல்குரல் கொடுப்ப்போம். தமிழகத்தில் உள்ள தண்ணீர் பிரச்சனை இவ்விரு நதிகளை இணைப்பதன் மூலம் தீர்க்கப்படும் என்றார்.