வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By

சுவையான முட்டை மசாலா செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
முட்டை - 3
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
கடுகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கருவேப்பிளை - சிறிதளவு
 
வறுத்து அரைக்க:
 
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 1/2 டீஸ்பூன்
கிராம்பு மற்றும் ஏலக்காய் - 1
காய்ந்த மிளகாய் - 4
தனியா - 2 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
முந்திரி - 4
தேங்காய் துருவியது - 3 டீஸ்பூன்
செய்முறை: 
 
முதலில் சீரகம், மிளகு, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய், தனியா, கசகசா, முந்திரி, தேங்காய் ஆகியவற்றை எண்ணெய் ஊற்றாமல்  வறுத்துக் கொள்ளவும். பின் அதில் சூடு போனதும் மிக்ஸியில் பேஸ்டாக மைய அரைத்துக் கொள்ளவும்.
 
பின்னர் தக்காளி மற்றும் காய்ந்த மிளகாயையும் பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும். முட்டைகளை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.  அடுத்ததாக கடாயில் எண்ணெய் ஊற்றி காய விடவும். அதில் கடுகு மற்றும் சீரகம் போட்டுக் பொறிக்கவும்.
 
பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வந்ததும் தக்காளி பேஸ்டை போட்டு வதக்கவும். ஊற்றிய எண்ணெய் தனியே பிரிந்து வரும் வரை வதக்கவும். அடுத்ததாக வறுத்து அரைத்த பேஸ்டை அதில் போடவும். குறைந்த  அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும்.
 
கொதிநிலையை அடையும் போது வேகவைத்த முட்டைகளை அதில் போடவும். சிறு தீயில் 10 நிமிடங்கள் கெட்டியாகும் வரை  கொதிக்கவிடவும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடவும். சுவையான செட்டிநாடு முட்டை மசாலா ரெடி. இது சாதத்துக்கு  மிகவும் சுவையாக இருக்கும்.