1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: புதன், 20 மார்ச் 2019 (12:46 IST)

அழகான வேட்பாளரை இழந்துவிடாதீர்கள்: உதயநிதியின் பேச்சால் வெட்கமடைந்த பெண் வேட்பாளர்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு இன்று முதல் பிரச்சாரத்திற்கும் கிளம்பிவிட்டார். திருவாரூரில் அவர் செய்த முதல் நாள் பிரச்சாரத்திற்கே நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளதால் திமுகவினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
 
அதேபோல் ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினும் தற்போது பிரச்சார களத்தில் குதித்துள்ளார். அவர் தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தங்கபாண்டியன் மகள் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
 
இந்த தொகுதி வாக்காளர்கள் ஒரு அழகான வேட்பாளரை இழந்துவிடக்கூடாது. நான் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை அழகு என்று சொன்னது அவருடைய உருவத்தை வைத்து மட்டுமல்ல, அவரது அழகு தமிழ் மற்றும் தமிழ் மீது அவர் கொண்டுள்ள பற்றை குறிக்கும் என்று அவர் விளக்கமளித்தார். உதயநிதி, தமிழச்சி தங்கபாண்டியனை அழகி என்று கூறியதும் அவர் வெட்கத்தால் தலை குனிந்து சிரித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.