ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : ஞாயிறு, 17 மார்ச் 2019 (13:17 IST)

தமிழகத்தில் காங்கிரஸ் vs பாஜக மோதல் - நேருக்கு நேர் !

தேசிய அளவில் பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் இரு வேட்பாளர்களைக் கொண்டுள்ள கட்சிகளான காங்கிரஸும் பாஜகவும் தமிழகத்தில் இரண்டு தொகுதிகளில் நேருக்கு நேர் மோதிக்கொள்கின்றனர்.

நாட்டில் உள்ள தேசியக் கட்சிகளில் காங்கிரஸும் பாஜகவும் ஒன்றை ஒன்று கடுமையாக எதிர்த்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகால பாஜகவின் ஆட்சி பாசிச ஆட்சி எனக் காங்கிரஸ் பாஜகவைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. பிரதமர் வேட்பாளர்களான மோடியும் ராகுலும் வார்த்தைப் போர்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் திமுக கூட்டணியில் இடம்பெற்று 10 தொகுதிகளைப் பெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 5 தொகுதிகளை மட்டும் பெற்றுள்ளது. இப்போது இருக் கட்சிகளும் போட்டியிட இருக்கும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இருக் கட்சிகளும் தமிழகத்தில் நேரடியாக மோதிக்கொள்ளும் தொகுதியாக சிவகங்கை தொகுதியும் கன்னியாகுமரி தொகுதியும் உள்ளன. சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்த்திக் சிதம்பரமும் பாஜக சார்பில் ஹெச் ராஜாவும் நிறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேப்போல கன்னியாகுமரியில் பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தியை நிற்க சொல்லி தொண்டர்கள் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.