1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : புதன், 17 ஏப்ரல் 2019 (15:07 IST)

ஓட்டே போட வேண்டாம் போயா... தம்பிதுரை எப்பவோ பேசியது இப்போ ஆப்பா போச்சே...

மக்களவை கரூர் வேட்பாளர் தம்பிதுரை சில மாதங்களுக்கு முன்னர் கரூரை அடுத்த தாளியாபட்டிக்கு சென்ற போது அங்கிருந்த மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு எனக்கு ஓட்டு போட வேண்டாம் என கூறிய வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 


சட்டசபை துணை சபாநாயகர் தம்பிதுரை கரூரை அடுத்த தாளியாபட்டி கிராமத்துக்கு சென்றார். அவருக்கு சால்வை போர்த்தி மக்கள் மரியாதை அளித்தனர். 
 
அப்போது அங்கு கூட்டத்தில் நின்றிருந்த ஒரு இளைஞர் நாலு வருஷம் கழித்து இப்பத்தான் தொகுதி பக்கம் வருகிறீர்களா..? என தன் ஓட்டுப்போட்ட உரிமைக்காக வெற்றி பெற்ற வேட்பாளர் தம்பிதுரையிடம் கேட்டுள்ளார்.
 
இதனை சற்றும் எதிர்பார்க்காத தம்பிதுறை உடனே அந்த இளைஞனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், எனக்கு மொத்தம் முப்பதாயிரம் கிராமம் இருக்கு. நீ இப்படி பேசறது தப்பு பா... தொகுதிக்கு வரலீணு சொல்றது ஃபேசனா போச்சு. நான் ஒரு நாளைக்கு 50 தொகுதிக்கு போகிறேன். 
 
நான் தொகுதிக்கு வர்றப்ப நீ இல்லாம போனதுக்கு நான் என்ன பண்ணறது... இப்படியெல்லம் நீ பேசக்கூடாது. நீ ஒன்னும் எனக்கு ஓட்டு போடவேணாம் போ எனறு பேசினார். இதை அவர் பேசி பல மாதங்களான நிலையில், தற்போது அவர் அதே கரூர் தொகுதி மக்களவை தேர்தல் வேட்பாளாராக நிற்பதால், இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களி பகிரப்பட்டு வருகிறது.