1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (13:43 IST)

‘உங்க *** ஓட்டு தேவை இல்லை’; பீப் வார்த்தையில் திட்டிய தம்பிதுரை ஆதரவாளர்

தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நெருங்க இன்னும் சில நாட்களே உள்ளது. பல்வேறு கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். 
 
எதிர்கட்சிகளின் ஊழல்களை ஆளுங்கட்சியினரும், ஆளுங்கட்சியினரின் ஊழல்களை எதிர்கட்சிகளும் மாறி மாறி குறை சொல்லி பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 
 
அந்த வகையில், கரூர் தொகுதி குஜிலியம்பாறையில் வாக்கு சேகரிக்க சென்ற தம்பிதுரையை பொதுமக்கள் புறக்கணித்து துரத்தி அனுப்பிய செய்தி நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. மக்களின் இந்த செயலால் தம்பிதுரை, வந்தா விரட்டி அடிங்க, வரலனா திட்டுங்க என கூறிவிட்டு கடுப்பாகி அங்கிருந்து சென்றார். 
ஆனால், இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னர் அதிமுக நிர்வாகிகள் பெண்களிடம் பீப் வார்த்தைகளை பயன்படுத்தி மிரட்டியதாக தகவல் கிடைத்துள்ளது. ஆம், தம்பிதுரை ஓட்டு கேட்டு வருவதற்கு முன்னர் கிராம மக்கள் சாலை மரியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 
 
குறிப்பாக பெண்கள் திரலாக கலந்துக்கொண்டவர். அப்போது அங்கு வந்த திமுக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் மதுரபாண்டியன், ‘உங்க *** ஓட்டு தேவை இல்லை’ என கெட்ட வார்த்தை பயன்படுத்தி திட்டியுள்ளார். 
 
இதனால் கடுப்பான மக்கள் ‘அதிமுகவிற்கு ஓட்டு போட மாட்டோம் என’ கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த எம்.எல்.ஏ. பரமசிவத்தை முற்றுகையிட்ட மக்கள் அதிமுக நிர்வாகியின் கேவலமான பேச்சு குறித்து புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு அவர் கிராம மக்களிடம் வருத்தம் தெரிவித்தாக தெரிகிறது.