திருமாவளவனைக் கார்ட்டூன் போட்டு கிண்டல் செய்த பாஜக !

Last Modified புதன், 3 ஏப்ரல் 2019 (10:04 IST)
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமா வளவனைக் கார்ட்டூன் கேலிச் சித்திரம் வரைந்து கேலி செய்துள்ளது தமிழக பாஜக.

விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத் தேர்தலை திமுக கூட்டணியில் இணைந்து எதிர்கொள்கிறது. அந்தக் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகியத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிதம்பரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுசெயலாளர் ரவிக்குமாரும் சிதம்பரம் தொகுதியில் தலைவர் திருமாவளவனும் போட்டியிடுகின்றனர்.

சிதம்பரம் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திருமாவளவன் அத ஒருக்கட்டமாக சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு அர்ச்சகர்கள் திரூநீறு இட்டு மாலை அணிவித்தனர். அவர் அவர்கள் இட்ட திருநீறை அழிக்காமல் அப்படியே அங்கு உள்ளவர்களிடம் வாக்கு சேகரித்தார். நாத்திகரான திருமா வளவன் கோயிலுக்கு சென்றதும் திருநீறு அணிந்து வாக்கு சேகரித்ததும் அவரின் சகிப்புத்தன்மைக்காக பெரிதும் பாராட்டப்பட்டாலும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

இது தொடர்பாக தமிழக பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டு அவரை கேலி செய்துள்ளது. மேலும் இந்துக்களின் வாக்குகளுக்காகவே திருமாவளவன் இவ்வாறு செய்கிறார் என்றும் தெரிவித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :