புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (15:21 IST)

ஒரேக் கல்லில் இரண்டு மாங்காய் – ஈபிஎஸ் & மோடியைத் தாக்கிய ஸ்டாலின்

திருவாரூர் மாவட்டத்தின் குடவாசல் பகுதியில் பிரச்சாரம் செய்த ஸ்டாலின் இந்த தேர்தல் மோடியையும் தமிழக முதல்வரையும் வீட்டுக்கு அனுப்பும் தேர்தல் என்று கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் பிரச்சாரங்களில் மூழ்கி உள்ளது. தமிழக மற்றும் தேசிய தலைவர்கள் தமிழகத்தை முற்றுகையிட்டுள்ளனர் பிரச்சாரத்தின் போது தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் இடையில் பிரச்சாரத்தின் போது வார்த்தைப் போர் முற்றியுள்ளது.இந்நிலையில் பிரச்சாரத்துக்கு இன்றுதான் கடைசி நாள் என்பதால் தேர்தல் களம் உச்சபட்ச பரபரப்பில் இருக்கிறது.

அதை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தனது பிரச்சாரத்தை திருவாரூரில் நிகழ்த்தி வருகிறார். அப்போது பேசிய அவர் ‘நான் இப்போது தேர்தலுக்காக ஓட்டுக் கேட்க மட்டும் இங்கு வரவில்லை. கஜா புயலால் டெல்டா மக்கள் பாதிக்கப்பட்ட போது முதல் முதலாக வந்து பார்த்தவன் நான் தான். நியாயமாக முதல்வர்தான் வர வேண்டும். அவர் ஹெலி காப்டரில் பார்த்துவிட்டு சென்று விட்டார். பிரதமரோ வரவில்லை என்றால் கூட பரவாயில்லை. ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. இன்னும் இழப்பீடு பணமும் முழுமையாக வரவில்லை.

தமிழக மக்கள் நாடாளுமன்ற தேர்தலை மட்டும் மனதில் வைத்திருக்கக்கூடாது. மோடியை வெளியே அனுப்புவதுபோல எடப்பாடியையும் வெளியே அனுப்பப்போகிறோம். இந்த தேர்தலில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க வேண்டும்’ எனக் கூறினார்.