1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : திங்கள், 15 ஏப்ரல் 2019 (10:51 IST)

சோத்துல உப்பு போட்டுதான திங்கற... சீறிய சீமான்!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நாடாளுமன்ற தேர்தல் 40 தொகுதிகலிலும் தனது கட்சி வேட்பாளர்களை போட்டியிட செய்கிறார். இதற்காக அவர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறார். 
 
அந்த வகையில், சென்னையில் நடந்த பிரச்சார கூட்டத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆக்ரோஷமாக பேசினார். இந்த முறை மத்திய அரசை மிக கடுமையாக விமர்சித்தார். கூட்டத்தில் அவர் பேசியது பின்வருமாறு,
 
செல்போன் டிரான்சேக்‌ஷன் அதாவது பண பரிமாற்றம் என்பது நாட்டின் ஒரு வளர்ச்சியா? கூலி வேலை செய்யும் மக்களுக்கு உன் செல்போன் நம்பர் கொடு, டிரான்சேக்‌ஷன் பண்ணிடுவேன்னு சொல்லுவியா? இடத்துக்கு தகுந்தது போல பொருளாதார கொள்கைகள் வேண்டாமா?
எது டிஜிட்டல் இந்தியா பிச்சைக்காரர்களுக்கு ஸ்வைப் மிஷின் என்பது அல்ல. பிச்சைக்காரர்களே இல்லாத தேசத்தை உருவாக்குவதே நாட்டின் உண்மையான வளர்ச்சி. அடுத்து கஜா புயல்ல பாதி நாடு அழிஞ்சு போச்சு. 
 
ஆனால், வெட்கமே இல்லாம, எப்படிடா எங்க கிட்ட ஓட்டு கேட்டு வறீங்க? மானம், மரியாதை, சூடு, சொரணை எதுவுமே இல்லையா? சோத்துல உப்பு போட்டுதான திங்கறீங்க? சரி.. சரி.. ரொட்டி சாப்பிடுவியே.. அதுல கூட உப்பு போடறது இல்லையா? 
 
விவசாயிகளுக்கு ரூ.6,000 கடன், அதுல ரூ.2000 போட்டுட்டு மீதி ரூ.4,000-த்த நீங்களே வச்சிப்பீங்க. அடுத்த முறை என்னை பிரதமர் ஆக்கு, அப்போ மீதி பணத்தை கொடுத்துட்றேன்னு சொல்லுவாரு என கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.