அதிமுக ஆட்சி கவிழுமா? ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்

ச்
Last Updated: வியாழன், 23 மே 2019 (09:16 IST)
கடந்த மக்களவை தேர்தலோடு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 22 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் வெற்றிபெற்றால் மெஜாரிட்டியை இழக்கும் என்பதால் ஆட்சி மாற்றம் நடக்குமா? என்ற பதட்டமும் உருவாகியுள்ளது.
234 சட்டமன்ற தொகுதிகளில் தற்போது அதிமுக பெற்றிருக்கும் இடங்கள் 111. திமுக கூட்டணி பெற்றிருக்கும் இடங்கள் 97. மீத 26 தொகுதிகளில் 4 தொகுதிகளில் சுயேட்சை பிரதிநிதிகள் இருக்கின்றனர். அவர்களும் அதிமுக மேல் ஒரு காழ்ப்புணர்ச்சியோடே இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் 22 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றால் அதன் மொத்த இடங்கள் 119 ஆக உயரும். எனவே திமுக மெஜாரிட்டி பெறும் பட்சத்தில் அதிமுக ஆட்சியை கலைப்பதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மாநிலத்தில் திமுகவும், மத்தியில் காங்கிரஸும் ஆட்சி அமைப்பதே ஸ்டாலினின் ஸ்கெட்ச் என அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :