வெள்ளி, 5 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: சனி, 6 ஏப்ரல் 2019 (13:09 IST)

ஸ்டாலின் பேச்சை அவர் வீட்டு நாய் கூட கேக்காது: அதிமுக அமைச்சர் சாடல்

ஸ்டாலின் பேச்சை அவர் வீட்டு நாய் கூட கேக்காது: அதிமுக அமைச்சர் சாடல்
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டபேரவை தேர்தல்; வரும் ஏப்ரல் 18 தேதி நடைபெறயுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சரம் தீவிரம் அடைந்துள்ளது. 
 
அந்த வகையில், மதுரை கே.புதூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யனை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார். அவருடன் அதிமுக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோரும் பிரச்சாரத்தின் போது உடனிருந்தனர். 
 
அப்போது செல்லூர் ராஜூ பேசியதாவது, எடப்பாடி பழனிச்சாமி இரும்பு ஊரின் கரும்பு மனிதன், ஜெயலலிதாவிற்கு இருந்த அதே எழுச்சி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடமும் உள்ளது. அவர் செல்லும் இடத்தில் எல்லாம் மக்கள் வரவேற்பு அமோகமாக உள்ளது. 
ஸ்டாலின் பேச்சை அவர் வீட்டு நாய் கூட கேக்காது: அதிமுக அமைச்சர் சாடல்
அதிமுக கூட்டணிக்கு 40/40 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும் என கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிச்சாமி 3 ஆண்டு ஆட்சி நடத்தியுள்ளார். 
 
ஸ்டாலின் பேச்சை அவர் வீட்டு நாய் கூட கேட்காது. இந்திய அரசியலில் ஸ்டார் மோடி மட்டுமே. அவர் 130 கோடி மக்களுக்கு பாதுகாப்பு தருபவர் என பேசியுள்ளார்.