திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 6 ஏப்ரல் 2019 (11:42 IST)

அப்பளம் போல் நொறுங்கிய கார்: அதிமுக முன்னாள் எம்எல்ஏ, மனைவி உள்பட 3 பேர் பலி!!!

ஆம்பூரில் நடைபெற்ற சாலை விபத்தில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ அவரது மனைவி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவான சுந்தரவேல்(62) தனது மனைவியுடன் ஆம்பூரிலிருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரது டிரைவர் ஓட்டிச்சென்றார். அப்போது கார் விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி கன்டெய்னர் லாரி மீது மோதியது.
 
இந்த விபத்தில் காரில் இருந்த எம்.எல்.ஏ அவரது மனைவி மற்றும் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்துகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.