புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 13 ஏப்ரல் 2019 (08:39 IST)

சென்னையின் மூன்று தொகுதிகள் உள்பட 6 தொகுதிகளுக்கு தபால் வாக்குப்பதிவு ஆரம்பம்

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் இன்று தபால் வாக்குகள் பதிவாகி வருகிறது. தேர்தல் பணியில் உள்ள ஊழியர்களும் காவலர்களும் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் சென்னையின் ஒருசில இடங்களில் தேர்தல் ஊழியர்கள் யாரும் வராததால் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. குறிப்பாக சென்னை நந்தனம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், உட்பட ஐந்து தொகுதிகளில் உள்ள காவலர்கள் இன்று தங்கள் வாக்கை தபால் வாக்கு மூலம் பதிய இருந்த நிலையில் தேர்தல் ஊழியர்கள் யாரும் வராததால் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம்  ஏற்பட்டுள்ளது. 
 
தேர்தல் ஊழியர்கள் பணிக்கு உரிய நேரத்தில் வராததால் தபால் வாக்குகளை பதிவு செய்ய வந்த காவலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் சற்றுமுன் தேர்தல் அதிகாரிகள் வந்துவிட்ட நிலையில் தென்சென்னை, மத்திய சென்னை, வடசெனை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய ஆறு மக்களவை தொகுதிகளுக்கான தபால் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது