வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 13 ஏப்ரல் 2019 (21:39 IST)

விஜயகாந்த் பிரச்சாரம் செய்யும் தேதி: பிரேமலதா அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் நான்கு தொகுதிகளை பெற்ற தேமுதிக, வரும் தேர்தலில் அந்த நான்கிலும் வெற்றி பெற கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறது. குறிப்பாக தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும், விஜயகாந்தின் மூத்த மகன் பிரபாகனும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
 
உடல்நிலை காரணமாக விஜயகாந்த் பிரச்சாரம் செய்யவில்லை என்று கூறப்பட்ட நிலையில் தற்போது விஜயகாந்த் பிரச்சாரம் செய்யும் தேதியை பிரேமலதா அறிவித்துள்ளார்.
 
கூட்டணி கட்சி தலைவர்களை ஆதரித்து ஏப்ரல் 15-ம் தேதி தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் பிரசாரம் செய்யவிருப்பதாக இன்று  சாத்தூர் பிரச்சார கூட்டம் ஒன்றில் பிரேமலதா தகவல் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 16ஆம் தேதியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையவுள்ள நிலையில் கிட்டத்தட்ட கடைசி நேரத்தில் விஜயகாந்த் பிரச்சார களத்தில் இறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் அவர் எந்தெந்த தொகுதியில் பிரச்சாரம் செய்யவுள்ளார் என்பது குறித்த தகவல் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது