பெண்ணாக இருந்துகொண்டு இப்படி பேசலாமா? பிரேமலதாவை விளாசும் நெட்டிசன்கள்!!

Last Updated: திங்கள், 8 ஏப்ரல் 2019 (15:20 IST)
தேர்தல் பிரச்சாரத்தில் பிரேமலதா அவதூறாக பேசியது கடும் கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளது.
தேர்தல் கூட்டணிக்கு ஒரே நேரத்தில் திமுக, அதிமுக ஆகிய இருவரிடமுமே தேமுதிக பேரம் பேசியது நாம் அனைவரும் அறிந்ததே. தேமுதிக திமுகவிடம் பேரம் பேசியதை வெட்டவெளிச்சமாக்கியவர் திமுக பொருளாளர் துரைமுருகன். இதனால் தேமுதிகவிற்கு இருந்த கொஞ்சநஞ்ச பேரும் டேமேஜ் ஆகிப்போனது. இதனால் தேமுதிக திமுக மீது செம கடுப்பில் உள்ளது.
 
தேமுதிக நிர்வாகிகள் பலரே கட்சியின் தலைமை மீது அதிருப்தியில் உள்ளனராம். விஜயகாந்த் நன்றாக இருந்திருந்தால் பிரேமலதா இப்படி நடந்துகொள்வாரா என பும்புகின்றனராம்.
 
இந்நிலையில் பிரச்சாரத்தில் பேசிய பிரேமலதா பாலியல் வன்கொடுமைகள் எத்தனை நடந்தாலும் பரவாயில்லை. எங்களின் கூட்டணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என கூறினார். இது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண்ணாக இருந்துகொண்டு ஏன் இப்படி கீழ்த்தரமாக நடந்து கொள்கிறீர்கள் என கேள்வி எழுப்புகின்றனர் மக்கள். அதுபோக பிரேமலதா, விஜயகாந்த் பெயரையும் கட்சியின் பெயரையும் கெடுத்து வருகிறார் எனவும் கண்டிப்பாக இந்த முறை தேமுதிக வெற்றி பெற வாய்ப்பில்லை எனவும் கட்சி தொண்டர்களே கூறுகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :