மோடியின் கோட்டையில் இருந்து விலகிய பிரியங்கா காந்தி: தோல்வி பயமா?

modi
Last Updated: வியாழன், 25 ஏப்ரல் 2019 (14:43 IST)
பிரியங்கா காந்தி வாரணாசியில் போட்டியிடாதது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 
 
பிரியங்கா காந்தி மோடியின் சொந்த தொகுதியும், மோடியின் கோட்டையுமான வாரணாசி தொகுதியில் போட்டியிடப்போகிறார் என கூறப்பட்டது. அதெற்கேற்றாற் போல பிரியங்காவும் கட்சி மேலிடம் கூறினால் நான் போட்டியிடுவேன் என கூறியிருந்தார்.
 
ஆனால் தற்போது வாரணாசியில் பிரியங்கா போட்டியில்லை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அதற்கு பதில் கடைசி முறை வாரணாசியில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் அஜய் ராய் மீண்டும் களமிறக்கப்படுகிறார்.
 
இதற்கு பின்னணியில் ஒரு காரணம் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் வாரணாசி மோடியின் கோட்டை. கடந்த தேர்தலின் போதே மோடி 5 லட்சம் வாக்குகளை பெற்று மிகப்பெரிய வெற்றியடைந்தார். கிட்டதட்ட 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். தற்போதும் வாரணாசியில் மோடியின் அலை பலமாக வீசுகிறது என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. இதனால் மோடி வாரணாசியில் ஜெயிப்பது உறுதியாகிவிட்டது.
 
ஆகவே பிரியங்கா காந்தியை நிப்பாட்டி தோல்வியை சந்திக்க விரும்பாத காங்கிரஸ், மாற்று வேட்பாளரை முன்னிறுத்திருப்பதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :