அதிமுக அமைச்சர் அறையில் சோதனை நடத்திய வருமான வரித்துறை

uthyakumar
Last Updated: திங்கள், 15 ஏப்ரல் 2019 (20:51 IST)
அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசரம் செய்து வருகின்றனர். காங்கிரஸா - பாஜகவா  என்று தேசிய அரசியலில் மல்லுக்கட்டிக் கொண்டுள்ளன. மெகா கூட்டணி அமைத்துள்ளது. இதில் பாஜக, தேமுதிக, பாமக கட்சிகள் இணைந்துள்ளன.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி பணத்தை கைப்பற்றினர்.
 
இந்நிலையில் இன்று தமிழக அமைச்சர் உதயகுமாரின் அறையில் வெற்றுப் பைகள் சில துண்டுச் சீட்டுகள் இருந்ததாக இருந்ததாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
 
சோதனையின் போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரிடம் வாக்குமூலம் பெற்றதாக ஐடி தகவல் தெரிவித்துள்ளது..
 
மேலும்  அமைச்சர் ஆ.பி.உதயகுமாருக்கு சம்மன் அனுப்பியுள்ளது வருமான வரித்துறை. 


இதில் மேலும் படிக்கவும் :